உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஏரி கலங்கல் வடிகால்வாய் சேதம் பாப்பரம்பாக்கம் மக்கள் மனு

 ஏரி கலங்கல் வடிகால்வாய் சேதம் பாப்பரம்பாக்கம் மக்கள் மனு

திருவள்ளூர்: பாப்பரம்பாக்கத்தில் ஏரி கலங்கல் வடிகால்வாய் சீரமைத்ததை சேதப்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கடம்பத்துார் ஒன்றியம், பாப்பரம்பாக்கம் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்துள்ள மனு: பாப்பரம்பாக்கம் கிராமத்தில், மாரங்கேணி ஏரியில் இருந்து வரும் உபரிநீரை பயன்படுத்தி, விவசாயம் செய்து வருகிறோம். அந்த ஏரி நிரம்பினால் உபரிநீர், பெரிய ஏரிக்கு கலங்கல் வழியாக செல்லும். தற்போது, அந்த ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கலங்கல் வடிகால்வாய் பராமரிப்பின்றி இருந்தது. இதையடுத்து, கிராம மக்களாகிய நாங்களே, கிராம நிர்வாக அலுவலர் மூலம், கால்வாயை அளவீடு செய்து சீரமைத்தோம். இந்நிலையில், கிராம மக்கள் சீரமைத்த கால்வாயை சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இதனால், மழைக்காலத்தில் உபரிநீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால்வாயை சேதப்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுத்து, வடிகால்வாயை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை