உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் பகுதியில், ஆந்திர மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று நல்லாட்டூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், 60 என்பவர் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி