உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கணவரை கொன்று நாடகமாடியவர் கைது

கணவரை கொன்று நாடகமாடியவர் கைது

சென்னை:சென்ட்ரல் பல்லவன் சாலை, எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 28. இவரது மனைவி நாகம்மாள், 35. நேற்று முன்தினம் இரவு நாகம்மாள், தன் கணவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக, அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார்.உடனே அவரது உறவினர்கள் வந்து, மணிவண்ணனை ஆட்டோவில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர்.தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற திருவல்லிக்கேணி போலீசார், மணிவண்ணன் மனைவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் அவர் கூறியதாவது:சம்பவத்தன்று, இருவரும் மது அருந்தினோம். அதன் பிறகு, மிருகத்தனமாக,'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்துவிட்டு உறங்கிவிட்டார். அவரது செக்ஸ் டார்ச்சரை தாங்க முடியாமல், தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.உடனே, தாலி கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன்.இவ்வாறு, போலீசாரிடம் கூறியுள்ளார்.இதையடுத்து நேற்று, நாகம்மாளை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ