உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது பட்டறை. இப்பகுதியில் உள்ள செங்குன்றம் - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள்கோவில் நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து வாகனங்கள் என, தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் மற்றும் தனியார் திருமண மண்டபம் அருகே, குப்பை குவிந்துள்ளது.இந்த குப்பையில் கால்நடைகள் இரை தேடுவதால் ஏற்படும் துார்நாற்றத்தால், வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுவதோடு தொற்று நோய் அபாயத்திற்கும் ஆளாகின்றனர்.இந்த குப்பையில் இரை தேட வரும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.சில நேரங்களில் கால்நடைகள் திடீரென்று ஓடி வரும் போது விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பையை அகற்றவும் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவும நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்