உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மீஞ்சூர் ரயில்வே பாலத்தின் இணைப்பு சாலை பணி மந்தம் நீண்ட நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்

 மீஞ்சூர் ரயில்வே பாலத்தின் இணைப்பு சாலை பணி மந்தம் நீண்ட நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்

மீஞ்சூர்: மீஞ்சூர் ரயில்வே மேம்பால இணைப்பு சாலை பணிகள், அதற்கான கால அவகாசம் முடிந்து, ஐந்து மாதங்களாகியும் முடிவடையாமல் இருப்பதால், ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர். மீஞ்சூர் - நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே கேட் பகுதியில், கடந்த 2019ல் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதற்கான இணைப்பு சாலை அமைக்கும் பணிகள், கடந்தாண்டு பிப்., மாதம் துவங்கப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 67.95 கோடி ரூபாயில், இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதம் பணிகள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஆனால், காலஅவகாசம் முடிந்து ஐந்து மாதங்களான நிலையில், பாலத்தின் இணைப்பு சாலைக்கான பணிகள் நிறைவடையாமல் உள்ளன. தற்போது துாண்கள் கட்டப்பட்டு, அதன் மீது கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளே மந்தமாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்து சாலை அமைப்பது, தடுப்புச்சுவர் எழுப்புவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன. பணிகள் முடிக்க, மேலும் ஆறு மாதங்களாகும் நிலை உள்ளது. இதனால், வாகனங்கள் ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதும் தொடர்கிறது. அத்துடன், பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, மழைநீர் தேங்கி சகதியாக மாறியுள்ளது. அதில், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். நடந்து செல்லும் மக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கூடுதல் பணியாளர்களை கொண்டு மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை பணிகளை துரிதமாக முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை