உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எட்டிக்குப்பத்தில் முருகன் வீதியுலா

எட்டிக்குப்பத்தில் முருகன் வீதியுலா

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் ஊராட்சிக்குட்பட்ட எட்டிக்குப்பம் கிராமத்திற்கு ஆண்டுதோறும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்படி நேற்று காலை, 11:00 மணிக்கு முருகன் மலைக் கோவிலில் இருந்து உற்சவர் முருகப் பெருமான் படிகள் வழியாக திருக்குளம் என்கிற சரவணப்பொய்கை வந்தடைந்தார். பின், எட்டிக்குப்பம் மற்றும் தரணிவராகபுரம் சுமைதாரர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்த மாட்டு வண்டியில் உற்சவர் முருகப்பெருமானை திருத்தணி அக்கைய்யநாயுடு சாலை, சித்துார் சாலை, பைபாஸ் சாலை, தரணிவராகபுரம் வழியாக மாலை எட்டிக்குப்பம் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.பின், அங்குள்ள கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கிராமம் முழுதும் முருகர் வீதியுலா வந்தார். அப்போது, பெண்கள் தங்களது வீடுகளின் முன் வண்ண கோலங்கள் போட்டு தேங்காய் உடைத்து பூஜை நடத்தி வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை