உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேல்திருத்தணியில் முருகன் வீதியுலா

மேல்திருத்தணியில் முருகன் வீதியுலா

திருத்தணி,திருத்தணி முருகன் கோவிலில் இருந்து, ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று உற்சவர் முருகன், மேல்திருத்தணி பகுதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அந்த வகையில், நேற்று, மாலை 4:00 மணிக்கு உற்சவர் முருகன், மலைக்கோவிலில் இருந்து மலைப்படிகள் வழியாக மேல் திருத்தணி நல்லாங்குளம் வரை சுமைதாரர்கள் வாயிலாக கொண்டு வரப்பட்டது. பின், அங்கு தயாராக இருந்த மாட்டு வண்டியில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.பின் சிறப்பு தீபாராதனை நடந்த பின், மேல்திருத்தணி மற்றும் முருகூர் பகுதியில் உள்ள தெருக்களில், உற்சவர் வீதியுலா வந்து, மீண்டும் மலைக்கோவிலுக்கு வந்தடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை