உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் மைலார் திருவிழா; பொங்கல் வைத்து வழிபாடு

திருத்தணியில் மைலார் திருவிழா; பொங்கல் வைத்து வழிபாடு

திருத்தணி : வீரபத்ர சுவாமி கோவிலில், நேற்று நடந்த மைலார் திருவிழாவில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருத்தணி, சலவைத் தொழிலாளர்களின் குலதெய்வமான, வீரபத்ர சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் மைலார் திருவிழா நடந்து வருகிறது. நேற்று மைலார் விழா சங்க தலைவர் நதியாகுப்பன் தலைமையில் நடந்தது. காலை 10:30 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் கூடைகளை தலையில் சுமந்தவாறு, அனுமந்தாபுரம் வண்ணார் குட்டைக்கு வந்தனர்.அங்கு, பெண்கள் பொங்கல் வைத்து, மூலவர் வீரபத்ர சுவாமிக்கு படைத்து, தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, சலவை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் உணவை சாப்பிட்டனர். ஏற்பாடுகளை சலவை தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ