உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கல்வீச்சு நா.த.க., உறுப்பினர் மண்டை உடைப்பு

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கல்வீச்சு நா.த.க., உறுப்பினர் மண்டை உடைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் அறிமுகக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் உறுப்பினரான சுபேஷ், 37, என்பவர் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார். இரவு 9:00 மணியளவில் மேடைக்கு பின்னால் ரயில் நிலைய பகுதியில் இருந்து பறந்து வந்த இரண்டு கற்கள் இவரது தலையின் வலது பக்கம் விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து உடன் வந்த உறுப்பினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை மேற்கொண்டனர். இதுகுறித்து சுபேஷ் கொடுத்த புகாரின்படி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கூட்டத்தில் கற்கள் வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை