உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஏகாம்பரநாதருக்கு புதிய தங்கத்தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

 ஏகாம்பரநாதருக்கு புதிய தங்கத்தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை மூலம், புதிதாக செய்யப்பட்ட தங்க தேரை, காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்முன்னிலையில், அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக தங்கத்தேர் செய்ய வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளானையின்படி, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், பர்மா தேக்கு மரத்தில், மரத்தேர் செய்யப்பட்டது. மரத்தேரின் மீது, தாமிர, தங்க தகடுகள் பொருத்தப்பட்டு, தங்க தேர் செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட தங்க தேரின் வெள்ளோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் இருந்து, பல்வேறு வீதி வழியாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்க தேர் வந்தடைந்தது. அங்கு ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்திடம் தங்கத்தேர் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதிசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் தங்க தேரை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை