உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மையம் திறப்பு

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மையம் திறப்பு

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கண் அறுவை சிகிச்சை மையம் இல்லாததால், மக்கள் திருவள்ளூர் மற்றும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வந்தனர்.அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 60 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கண் அறுவை சிகிச்சை மைய கட்டடம் கட்டப்பட்டது.நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், சுகாதார துறை இணை இயக்குனர் நிவேதிதா, நகரமன்ற தலைவர் லஷ்மி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, கண் மருத்துவர் சிவசங்கரி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை