உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 3 ஆண்டுகளாக செயல்படாத ஊராட்சி அலுவலக கட்டடம்

3 ஆண்டுகளாக செயல்படாத ஊராட்சி அலுவலக கட்டடம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், எஸ். அக்ரஹாரம் அரசு நடுநிலைப் பள்ளி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக கட்டடத்தை முறையாக பராமரிக்காததால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டடம் முழுதும் விரிசல் அடைந்தது.மேலும் அலுவலகத்தின் அறை பகுதிகளில் மற்றும் கூரை தளம் சேதமடைந்து தளம் கீழே விழுந்துள்ளன. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டு உள்ளன.இதனால், ஊராட்சி மன்ற அலுவலகம், கே.ஜி.கண்டிகை--- குடிகுண்டா செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரம் ஒரு சிறிய அறை கட்டடத்தில் மூன்று ஆண்டுகளாக வருகிறது. அங்கு, ஊராட்சி பதிவேடுகள் கூட முழுமையாக வைப்பதற்கு போதிய இடவசதியில்லை. ஒன்றிய நிர்வாகம் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.ஆனால் ஊராட்சி நிர்வாகம், மூன்று ஆண்டுகளாக பழுதடைந்தும், பயன்பாட்டில் இல்லாத ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஆண்டுதோறும் பராமரிப்பு செலவு என, 25,000 ரூபாய் முதல், 40,000 ரூபாய் என கணக்கு காட்டப்படுகிறது.இதனால் அரசு பணம் வீணாகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ