உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மின்விளக்கு வசதி இல்லை பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு

 மின்விளக்கு வசதி இல்லை பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு

மீஞ்சூர்: நாலுார் கம்மவார்பாளையம் கிராமத்தின் பிரதான சாலை மற்றும் பாலம் ஆகிய இடங்களில் மின்விளக்கு வசதியில்லாததால், சிரமத்திற்கு ஆளாகி வரும் கிராம மக்கள், பி.டி.ஓ., அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். மீஞ்சூர் ஒன்றியம் நாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட நாலுார் கம்மவார்பாளையம் கிராமத்தின் பிரதான சாலை முதல் குடியிருப்பு பகுதிகள் வரை மின்விளக்குகள் இல்லை. நாலுார் கம்மவார்பாளையம் - மடியூர் கிராமங்களுக்கு இடையே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்திற்கும் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், கிராம மக்கள் இரவு நேரங்களில் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, நேற்று கிராம மக்கள், மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: நாலுார் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் முதல் கிராமம் வரை சாலை இருண்டு கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களாலும், வழிப்பறி சம்பவங்களாலும் பாதாசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஊராட்சி செயலரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது. கிராமத்திலும், பாலத்திலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை