உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆசைவார்த்தை கூறி சிறுமியரை சீரழித்த இருவருக்கு போக்சோ

ஆசைவார்த்தை கூறி சிறுமியரை சீரழித்த இருவருக்கு போக்சோ

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.விளக்கனாம்பூடி கிராமத்தைச் சேர்ந்த ஹேமநாதன் 24, என்பவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த சில ஆண்டுகளாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இந்நிலையில், கடந்த மாதம் மாணவியை வெளியூருக்கு அழைத்துச் சென்ற ஹேமநாதன், திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் தேடுவதை அறிந்து இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.இதுகுறித்து அறிந்த மாவட்ட சமூகநல துறை அதிகாரிகள், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஹேமநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருத்தணி@

@திருத்தணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து வீட்டில் இருந்தார். இந்நிலையில், திருத்தணி அடுத்த வி.கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த பாலாஜி, 35 என்பவர், சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்தனர்.இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட பாலாஜியை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை