உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போலீசுக்கு டிமிக்கி ரவுடி கைது

போலீசுக்கு டிமிக்கி ரவுடி கைது

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சுதாகர் என்ற திக்குவாய் சுதாகர், 42. இவர், அரும்பாக்கம் பிரபல ரவுடியான ராதாவின் நெருங்கிய கூட்டாளி.சுதாகர் மீது, கொலை உட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த இவர், கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு வழக்குகளில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசாருக்கு 'தண்ணி' காட்டி வந்தார். நேற்று, அரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த சுதாகரை, அரும்பாக்கம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை