| ADDED : ஜன 14, 2024 11:55 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஜேக்கப் கல்வி குழுமத்தில், நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், கல்வி குழுமத்தின் தாளாளர் ஜே.ஒய்.ஜேம்ஸ்ஜெயராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் முதல்வர் ஜாய்ஸ்மரியா வரவேற்றார்.பின் ஆசிரியர்கள், மாணவர்கள் மண்பானையில் பொங்கல் வைத்தனர். மாணவர்களின் தப்பாட்டம், புலியாட்டம், மாணவியரின் ரங்கோலி கோலம் போன்ற கலை நிகழ்வுகளும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடந்தன.இதில், பள்ளியின் தலைமை மற்றும் துணை தலைமை ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.