உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவில் ஊழியருக்கு சீருடை வழங்கல்

திருத்தணி கோவில் ஊழியருக்கு சீருடை வழங்கல்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் 29 உபகோவில்கள் என, மொத்தம் 30 கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள், திருத்தணி முருகன் கோவில் தலைமை அலுவலகம் வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த கோவில்களில், அர்ச்சகர் மற்றும் பட்டாட்சியர்கள் என, 26 பேரும், 157 ஆண் பணியாளர்களும், 27 பெண் பணியாளர்களும் என, மொத்தம் 210 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கான சீருடைகள், ஆண்டுதோறும் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஊழியர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று கோவில் தலைமை அலுவலகத்தில் நடந்தது.இதில், கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் பங்கேற்று, ஊழியர்களுக்கு, 2.20 லட்சம் ரூபாய் மதிப்பில் சீருடைகள் மற்றும் முருகர் காலண்டர்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்