| ADDED : டிச 08, 2025 06:17 AM
கும்மிடிப்பூண்டி: புது கும்மிடிப்பூண்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில் இருந்து புதுகும்மிடிப்பூண்டி வரை இரண்டரை கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. அந்த சாலை வழியாக தினசரி, ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் ஸ்தம்பித்து போக்குவரத்து நெருக் கடி ஏற்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள, 20 அடி அகல தார் சாலை போதுமானதாக இல்லை. எதிர் எதிரே இரு கனரக வாகனங்கள் கடக்க முடியாத நிலையில் உள்ளது. மேலும், சாலையோர ஆக்கிரமிப்புகள் ஏராளமாக இருப்பதால், சாலையை விட்டு இறங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என, மக்கள் தெரிவித்து வருகின்றனர். மாநில நெடுஞ்சாலைத் துறையினர், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடு த்துள்ளனர்.