உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் குவியல்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

மணல் குவியல்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

கும்மிடிப்பூண்டி: சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் பகுதியில், கடந்த மாதம் பெய்த கனமழையின் போது, மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் வடிந்தபின் மழைநீர் தேங்கிய இடத்தில், வண்டல் மண் படிந்தது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அகற்றத் தவறியதால், வண்டல் மணல் உலர்ந்து தற்போது மணல் குவியலாக காட்சியளிக்கிறது. மேம்பால இறக்கத்தில் வேகமாக வரும் கனரக வாகனங்களுக்கு இடையே டூ - -வீலர்கள் வரும்போது, மணல் குவியலை கண்டு திக்குமுக்காடி போகின்றனர். வேறு வழியின்றி மணலில் செலுத்தப்படும் டூ - -வீலர்கள் தடுமாறி கீழே விழ நேரிடுகிறது. இதனால் அப்பகுதியை அச்சத்துடன் டூ - -வீலர்கள் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை