உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துருபிடித்த பள்ளி பெயர்பலகை மாற்றப்படுமா

துருபிடித்த பள்ளி பெயர்பலகை மாற்றப்படுமா

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது புண்டரீகபுரம் கிராமம். இங்கு அரக்கோணம் சாலையில் அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.பள்ளியின் நுழைவு வாயிலில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பள்ளியின் பெயர் பொறிக்கப்பட்ட பலகை உள்ளது.இந்த பலகை துரும்பு பிடித்து பெயர்கள் மறைந்து காணப்படுகிறது. தற்போது பெயர்பலகை உடைந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே துரும்பு பிடித்த பெயர்பலகையை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ