உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளையாட்டு உபகரணம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

விளையாட்டு உபகரணம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை ஒட்டி, மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன.கடந்த 1ம் தேதி பாடியநல்லுாரியில் நடைப்பெற்ற விழாவில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, திட்டத்தை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வாயிலாக, 672 விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. அந்தந்த ஊராட்சிகளுக்கு பி.டி.ஓ., அலுவலகம் வாயிலாக அன்றே வினியோகிக்கப்பட்டது.ஆனால் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில், 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு விளையாட்டு பொருட்கள் சென்ற நிலையில், அந்தந்த பகுதி விளையாட்டு இளைஞர்களிடம் சென்று சேரவில்லை என கூறப்படுகிறது.இது குறித்து மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக விளையாட்டு பொருட்கள், இளைஞர்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி