உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில மாணவர் சிலம்பம்; 1,000 வீரர்கள் பங்கேற்பு

மாநில மாணவர் சிலம்பம்; 1,000 வீரர்கள் பங்கேற்பு

சென்னை, : மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஆதரவுடன், சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள, முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், தி லெஜன்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கான மாநில சிலம்ப போட்டி நேற்று நடந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 50க்கும் மேற்பட்ட சிலம்பக் குழுவைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட இளம் வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, வேல் கம்பு, சுருள் வால், மான் கொம்பு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், ஐந்து முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு ஏற்ப, வயதின்படி, தனித்தனி பிரிவின் கீழ் போட்டிகள் நடந்தன.சிலம்பம் மற்றும் தற்காப்புக் கலை வல்லுனர்கள் சரவணன், சுதாகரன், சூர்யமூர்த்தி ஆகியோர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை