உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலை துறையை கண்டித்து மெதுாரில் மறியல்

நெடுஞ்சாலை துறையை கண்டித்து மெதுாரில் மறியல்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் இருந்து, அரசூர் செல்லும் சாலையில், மேலப்பட்டறை, கொள்ளுமேடு, கொக்குமேடு, அண்ணாநகர், விடதண்டலம், விடதண்டலம் காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன.சாலை முழுதும் சரளைகற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலை சீரமைப்பதில் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் காட்டுவதாக கூறி, நேற்று மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த, 100 பேர் பொன்னேரி - பழவேற்காடு சாலையில் உள்ள மெதுாரில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொன்னேரி காங்., -- எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், தாசில்தார் மதிவாணன் அங்கு சென்றுபோராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கிராமவாசிகள் மழையில் நனைந்தபடி தொடர்ந்தனர்.முடிவில், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்திற்கு, கிராமவாசிகள் சிலருடன் சென்று பேச்சு மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.அதை தொடர்ந்து, கிராமவாசிகள் கலைந்து சென்றனர். காலை, 11:00 மணிக்கு துவங்கி, 1:00 மணிவரை நடந்த மறியல் போராட்டதால், பொன்னேரி - பழவேற்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ