உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சூப்பர் டிவிஷன் ஹாக்கி லீக் எழும்பூரில் இன்று துவக்கம்

சூப்பர் டிவிஷன் ஹாக்கி லீக் எழும்பூரில் இன்று துவக்கம்

சென்னை:சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், ஸ்ரீராம் பைனான்ஸ் 59வது சூப்பர் டிவிஷன் ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் இன்று துவங்குகின்றன.ஐ.சி.எப்., - தெற்கு ரயில்வே, தமிழக போலீஸ், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட மொத்தம் 14 சீனியர் அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் மோத உள்ளன.லீக் சுற்றுகள் முடிவில், இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. தினமும் மதியம், 2:00 மற்றும் மாலை 4:00 மணிக்கு இரு போட்டிகள் நடக்கின்றன.இன்று மாலை 4:00 மணிக்கு, துவக்க விழாவுடன் முதல் போட்டி துவங்குகிறது. தொடர்ந்து, 11ம் தேதி வரை லீக் சுற்றுகள் நடக்க உள்ளன.போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் மற்றும் பொதுச் செயலர் உதயகுமார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை