உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேர்தல் உத்தேச தேதி அறிவித்ததுமே பொன்பாடியில் சோதனை சாவடி திறப்பு

தேர்தல் உத்தேச தேதி அறிவித்ததுமே பொன்பாடியில் சோதனை சாவடி திறப்பு

திருத்தணி:லோக்சபா தேர்தல் வரும் ஏப்., 16ம் தேதி துவங்கவுள்ளது என, தேர்தல் ஆணையம் உத்தேச தேதி அறிவித்துள்ளது. இதையடுத்து, நேற்று தமிழக-- - ஆந்திர மாநில எல்லையான, திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில், இரு மாநில போலீசார் இணைந்து தேர்தல் சோதனை சாவடியை திறந்துள்ளனர்.இந்த சோதனை சாவடியை மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் அறிவுறுத்தலின்படி, திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன், ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்ட எஸ்.பி., அறிவுறுத்தலின்படி, புத்துார் டி.எஸ்.பி., ரவிகுமார் ஆகியோர் தலைமையில் இரு மாநில போலீசார் பொன்பாடி சோதனை சாவடிக்கு வந்து அறிமுகம் மற்றும் ஆலோசனை நடத்தினர்.அப்போது, தேர்தல் சுமுகமாக நடைபெறுவதற்கு, இரு மாநில எல்லையில் உள்ள போலீசார் வாகன தணிக்கை மற்றும் தேர்தல் நேரத்தில் நடக்கவுள்ள அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் இரு மாநில டி.எஸ்.பி.க்கள் நடத்தினர். ஆந்திர மாநிலத்தில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.திருத்தணி இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ், எஸ்.ஐ., ராக்கிகுமாரி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானதீ, நகரி இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., என, 10க்கும் மேற்பட்ட போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ