உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் திருமழிசை மக்கள் கடும் அவதி

 நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் திருமழிசை மக்கள் கடும் அவதி

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால், அடிப்படை தேவைகளுக்கு மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். திருமழிசை பேரூராட்சியில், 15 வார்டுகளில் 25,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த வெங்கடேஷ், 60, என்பவர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் சதீஷ் என்பவர், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலராக கூடுதலாக கவனித்து வருகிறார். இரு பேரூராட்சிகளையும் கவனித்து வருவதால், திருமழிசை பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து கூறவும், மனுக்களை செயல் அலுவலரிடம் நேரில் கொடுக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், வாரத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டும் அலுவலகத்திற்கு வரும் செயல் அலுவலைரை, பகுதிமக்கள் நேரில் சந்திக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, திருமழிசை பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலரை நியமித்து, மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை