உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திறப்பு விழா காணாத ரேஷன் கடை மதுக்கூடமாக மாறிய அவலம்

 திறப்பு விழா காணாத ரேஷன் கடை மதுக்கூடமாக மாறிய அவலம்

ஊத்துக்கோட்டை: கட்டி முடித்து, 11 மாதமாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம், மதுக்கூடமாக மாறி வருகிறது. பூண்டி ஒன்றியம், வேளகாபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் ரேஷன் கடை கட்டடம் சேதம் அடைந்தும், இடப்பற்றாக்குறையாகவும் உள்ளது. இங்கு, வேளகாபுரம், இந்திரா நகர், ராஜாங்குப்பம், எஸ்.ஆர்.கண்டிகை உள்ளிட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இடப்பற்றாக்குறையால் பொருட்கள் வாங்கும் போது மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில், 13.16 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. கடந்த 2023 - 24ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, 11 மாதங்களான நிலையில், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள், கட்டட வளாகத்தை மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, வேளகாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை