உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நுாலுக்கு பசை சேர்ப்பு பணி மந்தம்

நுாலுக்கு பசை சேர்ப்பு பணி மந்தம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிரமங்களில், விசைத்தறி நெசவு தொழில் நடந்து வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கூலி உயர்வு கேட்டு நெசவாளர்கள், கடந்த மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், மாற்று வேலை தேடி சென்னைக்கு புறப்பட்டவர்களில், அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த ஐந்து நெசவாளர்கள் விபத்தில் சிக்கி இறந்தனர். இதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு தொழிலுக்கு திரும்பினர்.ஆனாலும், கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால், தொழிலில் தொடர்ந்து மந்தநிலை நீடிக்கிறது. நுாலுக்கு பசை சேர்ப்பு பணிகளை மேற்கொள்ளும் பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய்பேட்டையில் பசை சேர்ப்பு களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி