உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூட்டை உடைத்து 12 சவரன் திருட்டு

பூட்டை உடைத்து 12 சவரன் திருட்டு

சோழவரம்: சோழவரம் அடுத்த கும்மனுார் கிராமத்தை சேர்ந்தவர் குரு, 42. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரண்யா, கும்மனுார் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இருவரும் வீட்டை பூட்டி உறவினர் வீட்டிற்கு சென்றனர். இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர்.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 12 சவரன் நகை, 500 கிராம் வெள்ளி, 4,000 ரூபாய் ஆகியவை திருடு போயிருப்பது தெரிந்தது.இது குறித்து குரு, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை