உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி:ஜி.என்.டி., சாலையோரம் வளர்ந்த புதர் அகற்றப்படுமா?

திருவள்ளூர்: புகார் பெட்டி:ஜி.என்.டி., சாலையோரம் வளர்ந்த புதர் அகற்றப்படுமா?

ஜி.என்.டி., சாலையோரம் வளர்ந்த புதர் அகற்றப்படுமா?

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையான ஜி.என்.டி., சாலையில், சவுடு மண் மற்றும் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து, மண் துகள் பறந்து சாலையோரம் பரவி உள்ளது. இந்த மண் குவியல், சாலையோரம் குவிந்துள்ளதால், அவற்றில் செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர், சாலையோரம் வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.லோகேஸ்வரராவ், எளாவூர்.

திருத்தணி கோவில் பேருந்து ரயில் நிலையம் வரை இயங்குமா?

திருத்தணி முருகன் கோவிலில் முருகப்பெருமானை தரிசிக்க சென்னை சென்ட்ரல் மற்றும் ரேணிகுண்டா மார்க்கத்தில் இருந்து ரயில்கள் மூலம் தினமும் 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணி ரயில் நிலையம் வருகின்றனர். இங்கிருந்து, மலைக்கோவிலுக்கு நேரிடையாக பேருந்து வசதி இல்லாததால், ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்கின்றனர். சில பக்தர்கள் மட்டும், அரை கி.மீ., நடந்து சென்று, கோவிலுக்கு சொந்தமான தணிகை இல்லத்திற்கு செல்கின்றனர்.அங்கிருந்து கோவில் பேருந்து மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். எனவே, ரயில் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.சதீஷ்குமார், திருத்தணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை