உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளியின், 16வது ஆண்டு விழா, நேற்று முன்தினம், பள்ளி வளாகத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினர்களாக, ஐகோர்ட் நீதிபதி பெரிய கருப்பய்யா, திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை ஒட்டி, 'நீதிக்கு தலைவணங்கு' என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மேலும், 'வாலி வதம்', 'மனுநீதி சோழன்', 'நக்கீரர்', 'பொற்கைப் பாண்டியன்' 'முதலாம் சார்லஸ்' உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பள்ளியின் தாளாளர் ஸ்ரீதரன், முதல்வர்கள் ராதா மற்றும் சூரியநாராயணன் ஆகியோரும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை கல்யாணி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை