உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி வேனிலிருந்து தவறி விழுந்த மாணவன் பலி

பள்ளி வேனிலிருந்து தவறி விழுந்த மாணவன் பலி

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே, பள்ளிவேனில் இருந்து தவறி விழுந்து, அதேவேனில் சிக்கி பள்ளி மாணவன் இறந்தார்.கும்மிடிப்பூண்டி அடுத்த, தேவம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவர். இவரது மகன் பிரவீன்ராஜ், 7. இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.பள்ளி வேன் மூலம் தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல், பள்ளி வேனில் சிறுவன் பிரவீன்ராஜ் ஏறினான். தேவம்பட்டிலிருந்து புறப்பட்ட வேன் ரெட்டம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அங்குள்ள இருளர் காலனி அருகே செல்லும்போது, சாலைப் பள்ளத்தில் வேன் இறங்கி ஏறியது.இதில் வேனின் கதவு திறந்து, அதன் அருகில் அமர்ந்து வந்த பிரவீன்ராஜ் வண்டியிலிருந்து தவறி வெளியில் விழுந்தான்.வேனின் பின் சக்கரத்தில் சிக்கிய பிரவீன்ராஜ் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தான்.இதுகுறித்து, தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசினர்.இதுதொடர்பாக, உப்புநெல்வாயல் கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுனர் பிரகாசம், 30 என்பவரை போலீசார் கைது செய்தனர். பள்ளி நிர்வாகத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை