உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் திருடிய வாகனங்கள் பறிமுதல்: இருவர் கைது

மணல் திருடிய வாகனங்கள் பறிமுதல்: இருவர் கைது

திருவள்ளூர் : எண்ணூர் துறைமுகம் அருகே, மணல் திருட்டில் ஈடுபட்ட, ஜே.சி.பி., மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.எண்ணூர் துறைமுகம் அடுத்த, காட்டுப்பள்ளி பகுதியில், மணல் திருட்டு நடப்பதாக வந்த தகவலையடுத்து காட்டூர் எஸ்.ஐ., லோகய்யா மற்றும் போலீசார், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை செய்தனர்.அப்போது அங்கு ஜே.சி.பி., இயந்திரம் மூலம், லாரியில் மணல் திருட்டு நடப்பது தெரிந்தது. இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட ஜே.சி.பி., இயந்திரத்தையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அதன் டிரைவர்களான பழவேற்காடு வைரவன்குப்பம் சரண்ராஜ், 32 மற்றும் மீஞ்சூர் பட்டமந்திரி வேலாயுதம், 42 ஆகிய இருவரையும் கைது செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி