உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி குளம் சீரமைப்பு பணி விறுவிறு

திருத்தணி குளம் சீரமைப்பு பணி விறுவிறு

திருத்தணி:திருத்தணி சுப்ரமணியபுரம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குளம் போதிய பராமரிப்பின்றி கிடந்தது. மேலும் குளக்கரைகள் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதையடுத்து கடந்தாண்டு, நகராட்சி நிர்வாகம் குளக்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றி, 1.40 கோடி ரூபாய் மதிப்பில், குளம் சீமைப்பு பணிகள் துவங்கியுள்ளன. குளத்தை ஆழப்படுத்தியும், கரைகள் பலப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தற்போது துரித வேகத்தில் நடந்து வருகின்றன.இதுதவிர குளத்தை சுற்றியும் அப்பகுதி மக்கள் நடைபயிற்சி செல்வதற்கு வசதியாக பிளேவர் பிளாக் சாலை மற்றும் குளத்தை சுற்றியும் மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை