உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண் தற்கொலை வழக்கில் இருவர் கைது

பெண் தற்கொலை வழக்கில் இருவர் கைது

மப்பேடு:மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் மனைவி மஞ்சுளா, 37. திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் ஸ்டீபன்ராஜ் கடந்த மே மாதம் 15ம் தேதி இறந்து விட்டார். ஸ்டீபன்ராஜ் இறப்பிற்கு மஞ்சுளா தான் காரணம் என கூறி சேர்ந்த மாமனார், மாமியார், மற்றும் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.இதனால் விரக்தியடைந்த மஞ்சுளா கடந்த 14ம் தேதி நள்ளிரவு மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த மப்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மஞ்சுளா இறப்பிற்கு மாமனார், மாமியார், நாத்தனார் மேரி ஜோஸ்பின் ராணி, 42, கணவரின் சகோதரர் பால்ராஜ், 52 ஆகிய நால்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் மஞ்சுளாவை கணவரின் உறவினர்கள் தற்கொலைக்கு துண்டியது தெரிய வந்தது. இதையடுத்து மப்பேடு போலீசார் பால்ராஜ், மேரி ஜோஸ்பின் ராணி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை