உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் இருவர் பலி

சாலை விபத்தில் இருவர் பலி

கும்மிடிப்பூண்டி:ஊத்துக்கோட்டை அடுத்த கரமனுார்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர்கள் அருண், 22, விக்னேஷ், 15, லாரன்ஸ், 23. இவர்கள் நேற்று மாலை, 6:30மணிக்கு, பாதிரிவேடு அடுத்த கரடிபுத்துார் - பாலவாக்கம் சாலையில், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.கரடிபுத்துார் கிராம் அருகே செல்லும்போது, எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் பைக் மீது மோதியதில் மூவரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் அருண், விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.லாரன்ஸ் பலத்த காயங்களுடன் ஊத்துக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ