உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோழவரம் - சீமாவரம் தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

சோழவரம் - சீமாவரம் தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

சோழவரம்:சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் இருந்து சோத்துப்பெரும்பேடு, செக்கஞ்சேரி, நெற்குன்றம், அட்டப்பாளையம் வழியாக சீமாவரம் வரை, மாநகர பேருந்துகள், 114எஸ், 57ஜெ ஆகியவை இயக்கப்படுகின்றன.இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான மாணவர்கள் சோழவரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கின்றனர்.இந்த வழித்தடத்தில் காலை, மாலை நேரங்களில் பேருந்து சேவை குறைவாக இருப்பதால், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:பள்ளி மாணவர்களின் வசதிக்காக காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த தடம் எண், 114எஸ், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது வரை அந்த பேருந்து, பள்ளிக்கு சென்று வரும் நேரங்களில் இயக்கப்படாமல் உள்ளது.இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, கல்வியும் பாதிக்கிறது. இந்த வழித்தடத்தில், 30க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. பேருந்து சேவை குறைவாக இருப்பதால் மாணவர்கள் மட்டுமின்றி கிராமவாசிகளும்ம் சிரமப்படுகின்றனர். மாணவர்கள், கிராமவாசிகளின் நலன் கருதி, காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை