உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

 மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

மப்பேடு: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கர் கதாவார், 30. இவர், மப்பேடு ஊராட்சி வெள்ளகால்வாய் மேட்டுச்சேரி பகுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த சங்கர் கதாவார் வீட்டின் மாடிக்கு சென்றார். அப்போது, அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பியில் தவறுதலாக கை பட்டதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை