மேலும் செய்திகள்
மினி லாரியில் மணல் கடத்தியவர் கைது
27-Aug-2025
பள்ளிப்பட்டு:ஆந்திர மாநிலத்தில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், நகரி அடுத்த சத்திரவாடா பகுதியில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம், கரிம்பேடு கிராமத்திற்கு டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக, பள்ளிப்பட்டு போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழக எல்லையோர கிராமமான கரிம்பேடில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு டிராக்டர்கள் மணல் ஏற்றிக்கொண்டு கரிம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தன. அவற்றை நிறுத்திய போலீசார், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். விசாரணையில், சத்திரவாடாவைச் சேர்ந்த டிராவிட், 25, நகரி அடுத்த காட்டுப்புதுாரைச் சேர்ந்த சின்னராஜி, 28, என தெரியவந்தது. டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Aug-2025