உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / சூடு, சொரணை இருந்தால் கவர்னர் ராஜினாமா செய்யட்டும் திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சூடு, சொரணை இருந்தால் கவர்னர் ராஜினாமா செய்யட்டும் திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருவாரூர்:திருவாரூர் அருகே கொரடாச்சேரி அடுத்த ஊர்குடியில், தஞ்சாவூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் முரசொலி, நாகை லோக்சபா தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:லோக்சபா தேர்தலை பா.ஜ., ஆட்சியை வீழ்த்தும் தேர்தலாக நினைக்க வேண்டாம். இந்திய மாநிலங்களில் மக்கள் ஆட்சியையும், இந்தியாவின் பன்முக தன்மையையும், ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றவும் பா.ஜ.,வை ஆட்சிக்கு வரவிடக் கூடாது.பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் கூட்டாச்சி இருக்காது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் பார்லிமென்ட் முறையே இருக்காது.கண்ணுக்கு முன் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலை நாளை தமிழகத்திற்கும் ஏற்படலாம். மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், மற்ற மாநிலங்களுக்கும், இந்த நிலை ஏற்படலாம். கடந்த 2014 முதல் ஆட்சி செய்யும் பா.ஜ., அரசு, இந்தியாவை எல்லா வகையிலும் பாழ்படுத்தியுள்ளது.தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை பிரசாரத்தில் ஈடுபட முடியாத வகையில் கைது செய்து வருகின்றனர்.பா.ஜ., ஜனநாயகத்திற்கு எதிராக ஆடும் ஆட்டம் அழுகுனி ஆட்டம். மோடி ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு நல்லது அல்ல.காவிரி உரிமைகளை விட்டுக்கொடுத்த பா.ஜ., அரசையும், அ.தி.மு.க., பழனிசாமியையும் டெல்டா மாவட்ட மக்கள் புறக்கணிக்க வேண்டும்.ஆட்சி பொறுப்பில் இருந்து, பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்த பழனிசாமி எந்த நன்மையும் செய்யாமல் துரோகங்கள் மட்டுமே செய்தார். தொல்லை தரும் கவர்னருக்கு எதிராக பழனிசாமி பேசுவதில்லை.தமிழக கவர்னர் ரவி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ashok Subramaniam
மார் 24, 2024 11:10

அதுதான் கிடையாதே பரம்பரைக்கே ஒரு மந்திரி செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படும் வகையில் இருந்தும் அவரைப் பதவியில் வைத்திருப்பது, இன்னொரு மந்திரி குற்றவாளி என்று அறிவித்தபின், உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்ட காரணத்தால் வெட்கமின்றி மீண்டு அவருக்கே மந்திரிபதவி கொடுப்பது எல்லாம், எந்த அளவுக்கு கொள்ளையை அனுமதித்து அதில் வரும் பங்கை அனுபவிக்கும் ஆசை உள்ளது என்றுதான் புரிகிறதே வெட்கங்கெட்டவர்கள்


Siva Kumar
மார் 24, 2024 05:02

muthlavarin pechu avarin tharathai thaazhthivitathu


RAMAKRISHNAN NATESAN
மார் 24, 2024 08:25

எப்போது தரம் இருந்தது அது இப்போது தாழ்வதற்கு ??


vbs manian
மார் 24, 2024 11:44

sabaashsir


Sathyan
மார் 24, 2024 04:29

முதலில் ஸ்டாலினுக்கு சூடு சொரணை இருந்தால் இவர் ஆட்சியை விட்டு விலகட்டும்


NicoleThomson
மார் 24, 2024 07:39

taasmaak pugazh manidhanukk adhellam kidaiyadhu


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை