உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் /  கோவிலில் அய்யனார் சிலை திருட்டு

 கோவிலில் அய்யனார் சிலை திருட்டு

திருவாரூர்: விநாயகர் கோவிலில், அய்யனார் சிலையை திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர். திருவாரூர் மாவட்டம், அரசூரில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, செப்பு உலோகத்தில் ஆன, அய்யனார் சிலை இருந்தது. இச்சிலை, 1.5 அடி உயரம், அரை அடி அகலம் கொண்டது. கோவிலை, அதே ஊரை சேர்ந்த அய்யப்ப பக்தர் சரவணன் பராமரித்து வருகிறார். நேற்று காலை, பக்தர் ஒருவர், விநாயகர் கோவிலுக்கு சென்றபோது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த அய்யனார் சிலை கொள்ளை போனது தெரிந்தது. குடவாசல் போலீசார் சிலையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ