உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் /  சிறுமியுடன் திருமணம் வாலிபருக்கு போக்சோ

 சிறுமியுடன் திருமணம் வாலிபருக்கு போக்சோ

திருவாரூர்: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது, போக்சோ வழக்கு பதியப்பட்டது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வேலங்குடியை சேர்ந்தவர் அருண்குமார், 22. இவர், அதே பகுதியான வெள்ளக்குடியை சேர்ந்த, நர்சிங் மாணவியான, 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். அருண்குமார் பாலியல் ரீதியாக அத்துமீறியதில், சிறுமி, 6 மாத கர்ப்பமானார். இதையடுத்து, செப்., 18ல் சிறுமியை அருண்குமார் திருமணம் செய்தார். இதுகுறித்த புகாரின்படி, போலீசார் அருண்குமார் மீது நேற்று, போக்சோ வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை