உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஜவுளிக்கடையில் பணியாற்றியசாத்தை.,வாலிபர் மாயம்

ஜவுளிக்கடையில் பணியாற்றியசாத்தை.,வாலிபர் மாயம்

சாத்தான்குளம்:சென்னையில் பிரபல ஜவுளிக்கடையில் வேலைபார்த்த இளைஞரை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, சாத்தான்குளம் ஜெபஞானபுரம் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் மகன் சுந்தரேசன்(22). இவர் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார். சென்ற மாதம் லீவு எடுத்து விட்டு சென்னையிலிருந்து சாத்தான்குளம் வந்தார். இம்மாதம் 1ம் தேதி சென்னை ஜவுளிக்கடைக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிச் சென்றுள்ளார். ஆனால் ஜவுளிக்கடைக்கு வரவில்லை என சென்னைகடையில் கூறியுள்ளனர். பல இடங்களிலும் விசாரித்ததில் சுந்தரேசன் பற்றி எந்தத் தகவலும் இல்லாததால் அவரது தந்தை குமரேசன் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி