உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடி வக்கீல் கொலையில் 6 பேர் கைது

துாத்துக்குடி வக்கீல் கொலையில் 6 பேர் கைது

துாத்துக்குடி : துாத்துக்குடியில் வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அக்காள் கணவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். துாத்துக்குடி அண்ணா நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் 32. வழக்கறிஞர். மெடிக்கல் ஸ்டோர், உடற்பயிற்சி மையம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டு முன்பாக நின்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சொத்து தகராறு

செந்தில் ஆறுமுகம் அக்காள் ப்ரீத்தியின் கணவர் கோபிநாத் 37. செந்தில் ஆறுமுகம் அக்காளுக்கு உரிய இடத்தில் கட்டுமானம் கட்ட முயற்சித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோபிநாத் மைத்துனரை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் கோவில்பட்டியை சேர்ந்த கோபிநாத், துாத்துக்குடி லெவிஞ்சிபுரம் சங்கரலிங்கம் 28, மணிகண்டன் 26, சத்யா நகர் ராம்குமார் 25, தமிழ்செல்வன் 24, ஸ்ரீநாத் 22 ஆகிய 6 பேரை கைது செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை