மேலும் செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் ரீல்ஸ் எடுக்க தடை
20-Nov-2025
கவின் கொலை: எஸ்.ஐ., ஜாமின் ஒத்திவைப்பு
19-Nov-2025
டயோசீஸ் தேர்தல் மோதல் தி.மு.க., நிர்வாகி கைது
18-Nov-2025
அனல் மின் நிலையத்தில் அசாம் தொழிலாளி பலி
17-Nov-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் பகுதியில் நேற்று மதியம் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மின்சார கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பாரத் இன்டர்நெட் நிறுவனத்தின் ஒயர் பள்ளி வாகனத்தின் மேல்பகுதியில் சிக்கி கொண்டது.இதனால், மின்கம்பம் கீழ் நோக்கி சரிந்தது மட்டுமின்றி, மின் ஒயர்களும் தரைநோக்கி தாழ்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. உஷாரான டிரைவர் பள்ளி வேனை நிறுத்தி விட்டு, அதில் இருந்து குதித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.இதையெடுத்து அப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்திய அதிகாரிகள், சரிந்து கீழே விழும் நிலையில் இருந்த மின்கம்பத்தை கயிறு மூலம் காட்டி, கீழே விழாமால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.மேலும், மின்கம்பம் சேதமடைந்துள்ளால் மாற்றம் செய்யப்படுவது மட்டுமின்றி, தாழ்வான நிலையில் செல்லும் மின் ஒயர்களும் உயர்த்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.மின்கம்பங்களில் கேபிள், இன்டர்நெட் ஒயர்கள் அதிகமாக கட்டப்பட்டுள்ளதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. மின் ஒயர்களை தவிர வேறு எந்த ஒயர்களும், விளம்பர பலகைகளும் மின்கம்பங்களில் இருக்காமல், மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
20-Nov-2025
19-Nov-2025
18-Nov-2025
17-Nov-2025