மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:உணவு பாதுகாப்புத் துறையின் துாத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து உள்ளிட்ட குழுவினர், எட்டையபுரம் சாலையில் உள்ள, ஹனிபா பிரியாணி கடை என்ற ேஹாட்டலில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.விற்பனையாகாமல் மீதமாகி, பிரிஜில் வைக்கப்பட்டிருந்த சிக்கன், மட்டன், மீன் வகை, பிரட் ஹல்வா, சப்பாத்தி மற்றும் பரோட்டா மாவு போன்றவற்றை கைப்பற்றினர். மேலும், தேதி குறிப்பிடப்படாமல், முன் தயாரிப்பு செய்து பிரிஜில் வைக்கப்பட்டிருந்த சிக்கன், காலாவதி தேதி குறிப்பிடப்படாத அரிசி மாவு, சோயா சாஸ் ஆகியவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.ஹோட்டலின் கிச்சன் துாய்மையற்றும், சிலந்தி வலைகளுடன் காணப்பட்டதுடன், தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கையும் இல்லை. பணியாளர்களுக்குத் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்ற சான்றிதழும், இருப்பு பதிவேடுகளும் இல்லை. மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல், உணவகம் நடத்தி வருவதும் உறுதியானது.இதையடுத்து, ஹனிபா பிரியாணி என்ற பெயரில், 'ப்ரான்சைஸ்' எடுத்த, லிவிங்ஸ்டா என்பவருக்குச் சொந்தமான ஹனிபா பிரியாணி என்ற கடையின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025