உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / செஞ்சுரி போட்ட குண்டாஸ் கோவில்பட்டி எஸ்.பி., தகவல்

செஞ்சுரி போட்ட குண்டாஸ் கோவில்பட்டி எஸ்.பி., தகவல்

துாத்துக்குடி:கோவில்பட்டியில் நடந்த இரட்டைக்கொலையில் கைதான மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மீன்கடை தகராறில் அத்தைகொண்டானைச் சேர்ந்த வெள்ளத்துரை, 49, பாண்டவர்மங்கலம் மகராஜன், 55 ஆகியோர் ஜூன் 7ல் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் கோவில்பட்டி மந்திதோப்பு மாரிராஜ், 32, சேர்மகனி, 30, இனாம்மணியாச்சி முத்துராஜ், 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., பாலாஜி சரவணன் பரிந்துரையில் கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டார்.இதன்படி மூவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது. இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் ஆறு பேர், போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 12 பேர் உட்பட 100 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என எஸ்.பி., தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை