மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் உள்ள போப் நினைவு உயர்நிலைப் பள்ளியில், 1964ல் பத்தாம் வகுப்பு படித்தவர்கள், 60 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பள்ளியில் சந்தித்துக் கொண்டனர். அனைவரும் தங்களது மலரும் நினைவுகளை கொண்டாடி மகிழ்ந்தனர்.பலர் முன்னணி வணிகர்கள், விவசாயிகள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள், நீதிபதி உள்ளிட்ட உயர்ந்த பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையிலும், 60வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றனர்.சக நண்பர்களுடன் கட்டித்தழுவி பள்ளி நாட்களில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான இனிய சம்பவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.மேலும், தங்களது ஆசிரியர்களைக் கவுரவித்ததோடு மட்டுமில்லாமல், போப்ஸ் கல்லுாரிக்குச் சென்று தங்களது கல்லுாரி நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025