உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / காலாவதியான தேன் விற்ற கடைக்காரருக்கு அபராதம்

காலாவதியான தேன் விற்ற கடைக்காரருக்கு அபராதம்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கடையில், பாட்டில் தேன் வாங்கினார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அது காலாவதியானது என தெரிந்தது. காலாவதியான தேதியில் இருந்து, ஒரு மாதம் 12 நாட்கள் கடந்து, கடைக்காரரால் விற்பனை செய்யப்பட்டிருந்தது.கடைக்காரரிடம் சென்று மாற்றுப் பொருள் தருமாறு சுப்பிரமணி கேட்டார். கடைக்காரர் மாற்றுப் பொருள் தர மறுத்ததுடன், சுப்பிரமணியை உதாசினப்படுத்தினார். இதுகுறித்து, துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சுப்பிரமணி வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீலபிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர், 'தேன் பாட்டில் விலையான 160 ரூபாய், சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு 5,000 ரூபாய், வழக்கு செலவுத் தொகை 5,000 ரூபாய் என மொத்தம் 10,160 ரூபாயை இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை