உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பஸ்சில் சத்தமாக பாட்டு போட்ட நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம்

பஸ்சில் சத்தமாக பாட்டு போட்ட நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம்

துாத்துக்குடி:துாத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த கென்னடி, 43, என்பவர், பழைய பஸ் நிலையத்தில் இருந்து முத்தையாபுரத்திற்கு தனியார் பஸ்சில், சில மாதங்களுக்கு முன் பயணம் செய்தார். அந்த பஸ்சில் பாட்டு சத்தமாக ஒலித்ததால், குறைக்குமாறு டிரைவரிடம் கூறினார். சத்தத்தை குறைக்க மறுத்த டிரைவர், கென்னடியை தரக்குறைவாக பேசியதோடு, பாதி வழியிலும் இறக்கி விட்டார்.இதனால் பாதிக்கப்பட்ட அவர், போலீசில் புகார் அளித்தார். மேலும், துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.கென்னடிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 10,000 ரூபாய், வழக்கு செலவுத் தொகையாக 10,000 ரூபாய் என, 20,000 ரூபாயை இரண்டு மாதத்திற்குள் வழங்க, பஸ் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வழக்கு தொடரப்பட்ட நாளில் இருந்து, 9 சதவீத வட்டி தொகையையும் சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை